25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


புரோ கபடி லீக்12வது சீசன் தொடரில், சாம்பியன் ஆன, டில்லி அணிக்கு கோப்பையுடன், ரூ. 3 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புரோ கபடி லீக்12வது சீசன் தொடரில், சாம்பியன் ஆன, டில்லி அணிக்கு கோப்பையுடன், ரூ. 3 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில், தமிழ் தலை வாஸ், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றன. நேற்று, டில்லியில் நடந்த பைனலில் புனே, டில்லி அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய டில்லி அணியினர், புனே அணியை ஒரு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். முதல் பாதி முடிவில் டில்லி அணி 20-14 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் ஓரளவு எழுச்சி கண்ட புனே அணிக்கு 14 புள்ளி மட்டும் கிடைத்தது. ஆட்டநேர முடிவில் டில்லி  அணி 31-28 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (2021-22, 2025) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.புரோ கபடி சாம்பியன் டில்லி அணிக்கு கோப்பையுடன், ரூ. 3 கோடி பரிசாக வழங்கப்பட்டது. புனே அணிக்கு ரூ.1.8 கோடி கிடைத்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News